வைகுண்ட ஏகாதசி எப்போது? - இன்று தொடங்கும் பகல் பத்து முதல் நாள்

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி சிறப்புகள், சொர்க்க வாசல் திறப்பு பகல் பத்து, இராப்பத்து ஆகிய தேதி விபரங்கள் இதோ... இன்று பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது...


மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், ‘வைகுண்ட ஏகாதசி’ என இந்துக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த அற்புத திருநாள் இன்று கோலாகலமாக துவங்குகிறது. பகல் பத்து எனும் வைகுண்ட ஏகாதசியின் முதல் பத்து நாள் விழாவின் முதல் நாள் இன்று தொடங்குகிறது.


 

வைகுண்ட ஏகாதசி என்றால் என்ன?
வைகுண்ட ஏகாதசி என்பது வைணவர்கள் தான் வழிபடும் திருமாலின் இருப்பிடமான இருக்கும் வைகுண்ட கதவுகள் இந்த வைகுண்ட ஏகாதசி தினத்தில் திறக்கப்படுவதாக நம்புகின்றனர்.