காஞ்சிபுரம் மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியும்
சன்பார்மா மருந்து தொழிற்சாலையும் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பேரணி நடத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமை வகித்து கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சன்பார்மா மருந்து தொழிற்சாலை நிறுவன அலுவலர் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தார். இந்த பேரணி கருங்குழி தேசிய நெடுஞ்சாலை வழியாக பொதுப்பணித்துறை பயணியர் விடுதி அருகே தொடங்கி மேலவலம்பேட்டை உட்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள்
மகளிர் சுய உதவிக்குழுவினர் வணிகர்கள் தொழிலாளர்கள் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பேரணியில் பொதுமக்களிடம் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் அரக்கனை பயன்படுத்த கூடாது என பதாகைகள் துண்டுபிரசுரங்கள் துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.